“ஐயோ விட்டுடுங்க” ஓடும் காரின் போனட்டில் தாய், மகளை ஏற்றி 2 கி.மீ தூரம் ஓட்டிய கும்பல்… என்ன காரணம் தெரியுமா..? நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஐயோ விட்டுடுங்க” ஓடும் காரின் போனட்டில் தாய், மகளை ஏற்றி 2 கி.மீ தூரம் ஓட்டிய கும்பல்… என்ன காரணம் தெரியுமா..? நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் பணத் தகராறு காரணமாக, தாய் மற்றும் மகளை காரின் போனட்டில் அமர வைத்து 2 கிலோமீட்டர் தூரத்திற்கு காரை ஓட்டிச் சென்ற அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. நவம்பர் 2-ஆம் தேதி இரவு நடந்த இந்த கொடூர சம்பவத்தின் சிசிடிவி (CCTV) காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மதுராவின் பானிகாவ் பகுதியில் வசிக்கும் பவன் மற்றும் பிரேம் ஆகியோருக்கு இடையே பண கொடுக்கல் வாங்கல் தொடர்பாக நீண்ட நாட்களாக மோதல் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று பிரேம் மற்றும் அவரது நண்பர்கள் காரில் வந்தபோது, அவர்களைத் தடுத்து நிறுத்த அந்தப் பெண்ணும் அவரது மகளும் காரின் போனட் மீது ஏறி அமர்ந்துள்ளனர். ஆனால், காரை நிறுத்தாத ஓட்டுநர், அவர்கள் இருவரையும் போனட்டிலேயே வைத்துக்கொண்டு அதிவேகமாக காரை ஓட்டிச் சென்று, தூரத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே இறக்கிவிட்டுத் தப்பியோடியுள்ளார்.

Advertisement

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்த தாய் மற்றும் மகளை மீட்டு சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், கார் ஓட்டுநர் உட்பட மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in