பக்திமானாக வந்து பகல் கொள்ளை… சாமி சிலைக்கு கும்பிடு போட்டு ₹2 லட்சம் நகைகளை அள்ளிய பலே திருடன்.. வைரலாகும் ஷாக் சிசிடிவி காட்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பக்திமானாக வந்து பகல் கொள்ளை… சாமி சிலைக்கு கும்பிடு போட்டு ₹2 லட்சம் நகைகளை அள்ளிய பலே திருடன்.. வைரலாகும் ஷாக் சிசிடிவி காட்சி..!!

Published

on

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சான்வரியா சேத் கோவிலில், பகல் நேரத்தில் புகுந்த திருடன் ஒருவன் சாமி நகைகளை கொள்ளையடித்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மாண்டல் காவல் நிலையத்திலிருந்து வெறும் 50 அடி தொலைவில் உள்ள மோகன் காலனி கோவிலில் நடந்துள்ள இந்த துணிகர கொள்ளை சம்பவம், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வழக்கம் போல் மதிய பூஜைகளை முடித்துவிட்டு பூசாரி கோவிலைப் பூட்டிவிட்டுச் சென்ற இடைவெளியில் இந்த திருட்டு நடந்துள்ளது. கோவிலுக்குள் நுழைந்த அந்த மர்ம நபர், முதலில் கடவுள் சிலைக்கு முன்பாக நின்று பக்தி பரவசத்துடன் கைகளைக் கூப்பி வணங்கி பிரார்தனை செய்துள்ளான். பின்னர், கடவுளை வலம் வந்து கும்பிட்டவன், யாரும் இல்லாத சமயத்தைப் பார்த்து சான்வரியா சேத் சிலையின் மீது அணிவிக்கப்பட்டிருந்த வெள்ளி நகைகளைத் திருடத் தொடங்கியுள்ளான்.

Advertisement

சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடவுளின் வெள்ளி கிரீடம், புல்லாங்குழல், கைகள் மற்றும் கால்களில் இருந்த காப்புகள் ஆகியவற்றைத் திருடிக்கொண்டு, அவன் தனது முதுகில் இருந்த பையில் மறைத்துக்கொண்டு சர்வசாதாரணமாக தப்பியோடியுள்ளான். மாலை நேரத்தில் பூசாரி மீண்டும் வந்து பார்த்த போது நகைகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தொப்பி மற்றும் கருப்பு சட்டை அணிந்த அந்த திருடனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in