LATEST NEWS
சோகம்..! திமுக முன்னாள் எம்.எல்.ஏ வரதராஜன் காலமானார்.. அதிர்ச்சியில் திமுகவினர்…!!
சேலம் மாவட்டம், சங்ககிரி தொகுதி தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ஆர். வரதராஜன் (86) உடல்நலக்குறைவால் காலமானார்.சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களாகச் சிகிச்சை பெற்று வந்த அவர், தீவிர மாரடைப்பு காரணமாகச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு சங்ககிரி தொகுதி மக்கள் மற்றும் தி.மு.க தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட வரதராஜன், 1989 முதல் 1991 வரை சங்ககிரி தொகுதியின் எம்.எல்.ஏ-வாகப் பணியாற்றி அப்பகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். தி.மு.க-வில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்த இவர், ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட தி.மு.க துணைச் செயலாளராகவும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராகவும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். இவருக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
