“ஒரு MLA-ன் விலை ₹70,00,000,000” தமிழகத்தையே உலுக்கும் எம்.எல்.ஏ பேரம்: பகீர் புகாரும்… பின்னணியில் பாயும் சிபிசிஐடி விசாரணையும்.. தமிழகத்தில் அதிர்ச்சி ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஒரு MLA-ன் விலை ₹70,00,000,000” தமிழகத்தையே உலுக்கும் எம்.எல்.ஏ பேரம்: பகீர் புகாரும்… பின்னணியில் பாயும் சிபிசிஐடி விசாரணையும்.. தமிழகத்தில் அதிர்ச்சி ..!!

Published

on

தமிழக அரசியலில் தவெக எம்.எல்.ஏ-க்களைக் குறிவைத்து குதிரை பேரம் நடத்தப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தவெக எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி, அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து ஆட்சியைத் கவிழ்க்க திமுக மற்றும் அதிமுக ஆகிய எதிர்க்கட்சிகள் முயல்வதாக மாநில சட்ட அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

தங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்களை இழுக்க தலா ₹60 கோடி முதல் ₹70 கோடி வரை ஆஃபர் கொடுக்கப்பட்டதாகவும், இதற்காக ஹவாலா பணம் பயன்படுத்தப்பட்டதா என்று விசாரணை நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, மதுரை மத்தி தொகுதி தவெக எம்.எல்.ஏ முஸ்தபா செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தனக்கு ₹15 கோடி தருவதாக தொலைபேசி மூலம் சிலர் பேரம் பேசியதாகப் புகார் தெரிவித்துள்ளார்.

Advertisement

எதிர்க்கட்சிகள் எவ்வளவு கோடிகளைக் கொட்டினாலும் தவெக எம்.எல்.ஏ-க்கள் யாரும் கட்சி மாறமாட்டார்கள் என்றும், தங்களின் ஒற்றுமை குலையாது என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டு, ஏற்கனவே கரூரைச் சேர்ந்த நபர் உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மறுபுறம், இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுக்குப் பின்னால் இருக்கும் சக்திகளிடம் இவ்வளவு பிரம்மாண்டமான தொகையும், கணக்கில் வராத கருப்புப் பணமும் எப்படிப் புழங்குகிறது எனப் பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் காரசாரமாகக் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். தேர்தல் அரசியலில் நேர்மை கேள்விக்குறியாக்கப்படுவதாகவும், மக்களின் ஜனநாயகத் தீர்ப்பை பண பலத்தால் மாற்ற முயல்வதாகவும் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in