“அடச்சீ இவனெல்லாம் ஆசிரியரா ..?” 8-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்குத் தொல்லை.. வகுப்பறையில் எல்லை மீறிய 49 வயது ஆசிரியர்.. அரசு பள்ளியில் பயங்கரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடச்சீ இவனெல்லாம் ஆசிரியரா ..?” 8-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்குத் தொல்லை.. வகுப்பறையில் எல்லை மீறிய 49 வயது ஆசிரியர்.. அரசு பள்ளியில் பயங்கரம்..!!

Published

on

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு மாணவிகளுக்குப் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சங்கர் (49) என்ற ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக இப்பள்ளியில் பணியாற்றி வந்த அவர், சுமார் ஒரு மாத காலமாக வகுப்பறையில் 8-க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் தகாத வார்த்தைகளைப் பேசியும், அத்துமீறியும் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் மாணவிகள் பயத்தால் இதனை வெளியில் சொல்லாமல் மறைத்த நிலையில், ஆசிரியரின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததால் பாதிக்கப்பட்ட மாணவிகளில் இருவர் இது குறித்துப் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். தலைமை ஆசிரியர் இது குறித்து சங்கரிடம் விசாரித்தபோது, அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளார்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோரிடம் நடந்தவற்றைக் கூறவே, அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் தலைமை ஆசிரியரைத் தொடர்பு கொண்டு முறையிட்டனர். உடனடியாகத் தலைமை ஆசிரியர் இவ்விவகாரத்தை சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எல்லப்பனின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். அதன்பேரில், குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று மாணவிகள் மற்றும் ஆசிரியரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆசிரியர் சங்கரைக் கைது செய்தனர். அரசுப் பள்ளி ஆசிரியரே மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கைதாகியுள்ள இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in