“என்னை நாயே கடிக்கல” கதறிய இளம்பெண்.. மெடிக்கல் சீட்டைக்கூட பார்க்காமல் ரேபிஸ் இன்ஜெக்ஷன் போட்ட நர்ஸ்.. அரசு மருத்துவமனை ஊழியர்களின் மெத்தனத்தால் அதிர்ச்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என்னை நாயே கடிக்கல” கதறிய இளம்பெண்.. மெடிக்கல் சீட்டைக்கூட பார்க்காமல் ரேபிஸ் இன்ஜெக்ஷன் போட்ட நர்ஸ்.. அரசு மருத்துவமனை ஊழியர்களின் மெத்தனத்தால் அதிர்ச்சி..!!

Published

on

பீகார் மாநிலத்தின் அரசு மருத்துவமனை ஒன்றில், கடுமையான வயிற்று வலியால் துடித்த இளம்பெண்ணுக்கு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோபால்கஞ்ச் சதர் மருத்துவமனைக்கு வயிற்று வலி காரணமாக எக்டேர்வா பகுதியைச் சேர்ந்த ரியா குமாரி என்ற இளம்பெண் சிகிச்சைக்காக வந்துள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், ஓபிடி சீட்டில் வயிற்று வலிக்கான மருந்துகளை எழுதிக் கொடுத்துள்ளார்.

மருந்துகளைப் பெற்றுக் கொள்வதற்காக ரியா குமாரி மருந்து வழங்கும் மையத்திற்குச் சென்றபோது, அங்கிருந்த ஊழியர்கள் அவரைத் தவறுதலாக ரேபிஸ் தடுப்பூசி போடும் வார்டுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. அங்கு பணியில் இருந்த செவிலியரும் நோயாளி கொண்டு வந்த மருத்துவச் சீட்டைச் சரியாகப் பார்க்காமல், நாய் அல்லது பிற விலங்குகள் கடித்தால் போடப்படும் ரேபிஸ் தடுப்பூசியை அந்தப் பெண்ணுக்குச் செலுத்தியுள்ளார். நாய் கடிக்காத தனக்கு ஏன் இந்த ஊசி போடப்பட்டது எனத் தெரியாமல் அந்தப் பெண் நிலைகுலைந்து போனார்.

Advertisement

ஊசி போடப்பட்டு நீண்ட நேரமாகியும் வயிற்று வலி குறையாததால், சந்தேகமடைந்த உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரித்தபோதே இந்த மெத்தனப் போக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததோடு, மாவட்ட முதன்மை மருத்துவ அதிகாரியிடம் (Civil Surgeon) புகார் அளித்தனர். இந்த விவகாரம் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் பாதுகாப்பு குறித்துப் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், தவறிழைத்த ஊழியர்கள் மீது உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவ அதிகாரி உறுதியளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in