CRIME
உச்சகட்ட கொடூரம்.. 8 வயதுசிறுமியை புதர் பகுதிக்கு இழுத்துச் சென்று… 35 வயது மிருகத்தின் வெறிச்செயல்.. நெஞ்சை நடுங்க வைக்கும் சம்பவம்..!!
குஜராத் மாநிலம் சூரத்தின் ஜிஐடிசி பகுதியில், வீட்டில் கழிவறை வசதி இல்லாததால் இயற்கை உபாதையைக் கழிக்க வெளியில் சென்ற 8 வயது சிறுமி, 35 வயது நபர் ஒருவரால் கொடூரமாகப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட சர்வேஷ் ராம்லகன் நிஷாத் (35) என்ற நபரை காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வீட்டிற்கு அருகில் இருந்த ஆள் நடமாட்டமில்லாத புதர் பகுதிக்குச் சென்ற அச்சிறுமியை, சர்வேஷ் பலவந்தமாக இழுத்துச் சென்று இந்தத் துரோகத்தை அரங்கேற்றியுள்ளார். சிறுமி இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராடியபோது, அவளைக் கன்னத்தில் அறைந்து, இச்சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் கடும் அச்சமடைந்த சிறுமி, வீட்டிற்கு ஓடிவந்து தனது தாயிடம் அழுதுகொண்டே விபரத்தைக் கூற, பதறியடித்த தாய் உடனடியாக ‘112’ என்ற காவல்துறை உதவி எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட சூரத் சைபர் கிரைம் மற்றும் உள்ளூர் காவல்துறையினர், குற்றவாளியைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
