LATEST NEWS
“அவர் என்னை கடத்தல, நான்தான் அவரை…” காதலியின் பேச்சைக் கேட்டுப் பயந்து நடுங்கிய காதலன்.. வைரல் வீடியோ..!!
காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய இளம்பெண் ஒருவர், “அவர் என்னை இழுத்துட்டு வரல, நான்தான் அவரோட ஓடி வந்தேன்” என்று சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட ஒரு விசித்திரமான வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி பெரும் சிரிப்பலையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தனது குடும்பத்தினர் யாருக்கும் தேவையில்லாத தொந்தரவு கொடுக்கக் கூடாது என்பதற்காக அந்தப் பெண் இந்த விளக்க வீடியோவை வெளியிட்டுள்ளார். தன்னிச்சையாகவே இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினாலும், அந்த வீடியோவின் பின்னணியில் உள்ள சில காட்சிகள் நெட்டிசன்களிடையே பெரும் சந்தேகத்தைக் கிளப்பி விவாதப் பொருளாக மாறியுள்ளன.
ஏனெனில், அந்த வீடியோவில் இளம்பெண் மிகவும் தைரியமாக பேசும் அதே வேளையில், அருகில் இருக்கும் அவரது காதலனோ கடுமையான பயத்தில் உறைந்துபோய் அமர்ந்திருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் காவல்துறையின் நடவடிக்கைக்குப் பயந்து, அந்த இளைஞன் ஏதோ மிரட்டப்பட்டு உட்கார வைக்கப்பட்டுள்ளது போன்ற ஒரு தோற்றத்தை அவனது முகபாவனை வெளிப்படுத்துகிறது. இந்த வீடியோவை உற்று நோக்கும் நெட்டிசன்கள், “பெண் காதலனை கடத்திச் சென்றது போலவும், பையன் உயிருக்கு பயந்து நடுங்குவது போலவும் இருக்கிறது” என்று சமூக வலைத்தளங்களில் மீம்களைப் பதிவிட்டு கலாய்த்து வருகின்றனர்.
