“என் மகளை அடிச்சே கொன்னுட்டான் சார்..” மருத்துவமனை வாசலில் அலறிய குடும்பம்..! தூக்கில் தொங்கியதாக கணவர் சொன்ன பொய்.. 24 வயது பெண் மரணத்தில் தொடரும் மர்மம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் மகளை அடிச்சே கொன்னுட்டான் சார்..” மருத்துவமனை வாசலில் அலறிய குடும்பம்..! தூக்கில் தொங்கியதாக கணவர் சொன்ன பொய்.. 24 வயது பெண் மரணத்தில் தொடரும் மர்மம்..!!

Published

on

கர்நாடக மாநிலம் துமகூரு பகுதியில் வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண் அடித்துக் கொல்லப்பட்டாரா என்பது குறித்து கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரு தெற்கு ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா ஒன்னகனஹட்டி கிராமத்தை சேர்ந்த சுஷ்மிதாவுக்கும் (வயது 24), துமகூரு மாவட்டம் எல்லாப்பூர் பகுதியை சேர்ந்த சீனிவாசுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி மாகடியில் உள்ள தனது மாமா வீட்டிற்கு சென்ற சுஷ்மிதா, அங்கிருந்து பின்னர் எல்லாப்பூரில் உள்ள தனது கணவர் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

இதற்கிடையே நேற்று முன்தினம் மாலை சுஷ்மிதாவின் கணவர் சீனிவாஸ், அவரது குடும்பத்தினருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, சுஷ்மிதா தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதன்பேரில் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்த குடும்பத்தினர், சுஷ்மிதா ஏற்கனவே இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சீனிவாஸ் தனது மனைவியை அடித்து கொன்றுவிட்டு, அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்துள்ளதாக சுஷ்மிதாவின் பெற்றோர் குற்றம்சாட்டினர்.

Advertisement

இதுகுறித்து எல்லாப்பூர் போலீசில் சுஷ்மிதாவின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த சுஷ்மிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வரதட்சணை கொடுமையால் சுஷ்மிதா அடித்துக் கொல்லப்பட்டாரா அல்லது உடலை தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடப்பட்டதா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணவர் சீனிவாசை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in