CRIME
“என் காதலை ஏத்துக்குறியா இல்லையா..?” மறுத்த அடுத்த நொடி 10 ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த விபரீதம்.. பள்ளியில் நடந்த பயங்கரம்.. பதறவைக்கும் பின்னணி..!!
அனந்தபூர் மாவட்டம் ரப்தாடு மண்டலத்தில் உள்ள ஒரு பள்ளியில், தன் காதலை ஏற்க மறுத்த பத்தாம் வகுப்பு மாணவி கோபிகா என்பவரை, மர்ம நபர் ஒருவர் விறகு வெட்டும் கோடாரியால் கழுத்தை அறுத்து கொடூரமாகத் தாக்கியுள்ளார். தற்போது அந்த மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று போராடி வருகிறார். இந்த கொடூரத் தாக்குதலைத் தடுக்க முயன்ற மற்றொரு மாணவிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
காதலை நிராகரித்த கோபத்தில் ஆத்திரமடைந்த அந்த நபர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
