அண்ணாமலையைப் போல பிழைப்பில்லாம புதிய கட்சியை நான் தொடங்கல… என்னைப் பத்தி பேச எந்த தகுதியும் இல்ல… மாணிக்கம் தாகூரின் ஆவேசப் பேச்சால் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அண்ணாமலையைப் போல பிழைப்பில்லாம புதிய கட்சியை நான் தொடங்கல… என்னைப் பத்தி பேச எந்த தகுதியும் இல்ல… மாணிக்கம் தாகூரின் ஆவேசப் பேச்சால் பரபரப்பு..!!

Published

on

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் கே. அண்ணாமலைக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “அண்ணாமலையைப் போன்று பிழைப்பில்லாமல் புதிய கட்சியை நான் துவங்கவில்லை. என்னைப் பற்றிப் பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்தத் தகுதியும் கிடையாது” என்று மாணிக்கம் தாகூர் காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் முடிவுக்குக் காங்கிரஸ் முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனத் தெரிவித்த அவர், இவ்விவகாரத்தில் பாஜக மற்றும் அண்ணாமலையின் நிலைப்பாட்டைக் கடுமையாகச் சாடினார்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, மாணிக்கம் தாகூர் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தொடர்ந்து ஆதரவாகப் பேசி வருவதாகக் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், மாணிக்கம் தாகூர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் சாதாரண உறுப்பினராக இணைந்துவிடுவது அவருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நல்லது என அண்ணாமலை சவால் விடுத்திருந்தார்.

Advertisement

திருப்பரங்குன்றம் விவகாரத்திலும் முருக பக்தர்களுக்கு மாணிக்கம் தாகூர் பாடம் எடுக்க வேண்டாம் என அண்ணாமலை விமர்சித்திருந்த நிலையில், அதற்குப் பதிலடியாகவே மாணிக்கம் தாகூர் இவ்வாறு ஆவேசமாகப் பேசியுள்ளார். இரு தலைவர்களுக்கும் இடையேயான இந்த நேரடி வார்த்தைப் போர் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in