LATEST NEWS
விஜய்யை வீழ்த்த புதிய கூட்டணி..?! அரசியலில் கைகோர்க்கும் தனுஷ் -அண்ணாமலை… பின்னணியில் டெல்லி மேலிடம்.!!
நடிகர் தனுஷ் விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ள நிலையில், தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலையுடன் இணைந்து செயல்படத் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அரசியல் களத்தில் நடிகர் விஜய்யை தனியாக எதிர்கொள்வது சவாலானது என்பதால், அண்ணாமலையுடன் கைகோர்த்துச் செயல்படுவது குறித்த ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த வியூகத்திற்குப் பின்னணியில் டெல்லியில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைகள் இருப்பதாகத் தெரிகிறது. தனுஷின் இந்த அரசியல் நகர்வுக்குப் பாஜக மறைமுகமாக ஆதரவு அளிக்கும் என்றும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஆதரவும் முழுமையாகக் கிடைக்கும் என்றும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய ஐடியா குறித்து நடிகர் தனுஷ் தற்போது தீவிரமாக ஆலோசித்து வருவதாக அந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
