“அரசு எதையோ மறைக்க முயல்கிறது” கள்ளக்குறிச்சி தவெக MLA விவகாரத்தில் சந்தேகம் கிளப்பும் அண்ணாமலை.. தமிழக அரசியலில் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அரசு எதையோ மறைக்க முயல்கிறது” கள்ளக்குறிச்சி தவெக MLA விவகாரத்தில் சந்தேகம் கிளப்பும் அண்ணாமலை.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!

Published

on

கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு எதையோ மறைக்க முயல்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகத் தெரிவித்து, பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் விரிவான பதிவை வெளியிட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் தலைமைச் செயலரிடம் புகார் அளித்தாரா, முதல்வர் அலுவலகத்திற்குப் புகார் சென்றதா, மற்றும் முதல்வர் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ-வை அழைத்து எச்சரித்தாரா என்பது குறித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மையா இல்லையா என்பதில் குழப்பம் நீடிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

இதே குற்றச்சாட்டு ஒரு சாமானியக் குடிமகன் மீது எழுந்திருந்தால், இந்த அரசாங்கம் இதே அளவு பொறுமையுடன் இருக்குமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களுக்குச் சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது உண்மையென்றால், அதனைத் தமிழக அரசு தனது செயலிலும் நிரூபிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, இந்த விவகாரத்தில் உண்மையை வெளிப்படையாகத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in