“எப்ப சாகப் போறோம்னு நினைச்சேன்” 54 வயசு ஹீரோவோடு ரொமான்ஸ் சீன் எப்படி இருந்துச்சி தெரியுமா..? உண்மையை போட்டுடைத்த நடிகை ராதிகா ஆப்தே..!! – cinefeeds
Connect with us

CINEMA

“எப்ப சாகப் போறோம்னு நினைச்சேன்” 54 வயசு ஹீரோவோடு ரொமான்ஸ் சீன் எப்படி இருந்துச்சி தெரியுமா..? உண்மையை போட்டுடைத்த நடிகை ராதிகா ஆப்தே..!!

Published

on

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் ‘அக்கா’ என்ற புதிய தொடரில் நடிகைகள் ராதிகா ஆப்தே மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்தத் தொடருக்கான ஆன்லைன் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, ராதிகா ஆப்தே தெலுங்கு சினிமா உலகில் தான் சந்தித்த கசப்பான அனுபவம் மற்றும் அங்கு நிலவும் ஆணாதிக்க சூழல் குறித்து வெளிப்படையாகப் பேசி தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

தனது தெலுங்குப் படம் ஒன்றின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் பேசிய ராதிகா ஆப்தே, அந்தத் திரைப்படத்தில் தன்னைவிட மிகவும் வயதான ஒரு நடிகருக்கு ஜோடியாக, காதல் காட்சிகளில் நடித்தது தனக்கு பெரும் வெறுப்பை ஏற்படுத்தியதாகக் கூறினார். மேலும், அக்கதையில் தன் கதாபாத்திரத்தின் மாமனையே திருமணம் செய்ய வேண்டிய சூழல் இருந்ததாகவும், சண்டைக்காட்சி ஒன்றில் அந்த நடிகர் தன்னைத் தோளில் தூக்கி வீசும்போது ‘நாம் எப்போது சாகப் போகிறோம்’ என்று நினைக்கும் அளவிற்கு அந்தப் படத்தின் ஒட்டுமொத்த அனுபவத்தையுமே தான் வெறுத்ததாகவும் அவர் ஆதங்கத்துடன் பகிர்ந்து கொண்டார்.

Advertisement

ராதிகா ஆப்தேவின் இந்த விமர்சனம் இணையத்தில் ரசிகர்களிடையே தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் கடந்த 2014-ஆம் ஆண்டு நடிகர் பாலகிருஷ்ணாவுடன் (அப்போது வயது 54) இணைந்து நடித்த ‘லெஜண்ட்’ திரைப்படத்தைத்தான் இவ்வாறு மறைமுகமாகக் குறிப்பிடுகிறார் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதோடு, படத்தின் கதையும் ஹீரோவும் யார் என்று தெரிந்தே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டு, தற்போது இத்தனை ஆண்டுகள் கழித்து தெலுங்கு சினிமாவைக் குறை கூறுவது ஏன் என்றும் ரசிகர்கள் அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in