LATEST NEWS
அமெரிக்கத் தேர்தலில் அதிரடி ட்விஸ்ட்..! ஓஹியோ ஆளுநர் தேர்தலில் விவேக் ராமசாமி அதிர்ச்சி தோல்வி – 16 ஆண்டு கால கோட்டையை இழந்த குடியரசுக் கட்சி..!!
அமெரிக்காவின் ஓஹியோ மாநில ஆளுநர் தேர்தலில் போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் விவேக் ராமசாமி அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஏமி ஆக்டன் சிறப்பான வெற்றி பெற்று, ஓஹியோ மாநிலத்தின் புதிய ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தத் தோல்வியின் மூலம், கடந்த 2010ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 16 ஆண்டுகளாகக் குடியரசுக் கட்சியின் வசம் இருந்து வந்த ஓஹியோ மாநில ஆளுநர் பதவியை ஜனநாயகக் கட்சி தற்போது கைப்பற்றியுள்ளது.
அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜே.டி. வான்ஸ் ஆகியோரின் முழு ஆதரவைப் பெற்றிருந்த போதிலும், விவேக் ராமசாமியால் இந்தத் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி வாரங்களில் விவேக் ராமசாமி தரப்பில் ஏமி ஆக்டனின் தாயாரைக் கொண்டு வெளியிடப்பட்ட சர்ச்சை கலந்த விளம்பரம் நாடு முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறி பின்னடைவை ஏற்படுத்தியது. இறுதியில், வாக்குகளின் அடிப்படையில் 50.9% வாக்குகளைப் பெற்று ஏமி ஆக்டன் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்து, ஓஹியோ மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
