ரூ.100-க்கு 10 காய்கறிகள்.. நவம்பர் -5 முதல் 7 ஆம் தேதி வரை.. தமிழக அரசின் தீபாவளி தொகுப்பு அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ரூ.100-க்கு 10 காய்கறிகள்.. நவம்பர் -5 முதல் 7 ஆம் தேதி வரை.. தமிழக அரசின் தீபாவளி தொகுப்பு அறிவிப்பு..!!

Published

on

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 10 வகையான காய்கறிகள் அடங்கிய ‘வெற்றி சிறப்பு காய்கறி’ தொகுப்பு ரூ.100-க்கு விற்பனை செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தச் சிறப்புத் தொகுப்பில் பெரிய வெங்காயம் (500 கிராம்), தக்காளி (500 கிராம்), கத்தரிக்காய் (250 கிராம்), உருளைக்கிழங்கு (250 கிராம்), கேரட் (200 கிராம்), பீன்ஸ் (200 கிராம்), பச்சை மிளகாய் (100 கிராம்), எலுமிச்சை (100 கிராம்), இஞ்சி (50 கிராம்) மற்றும் தேங்காய் (400 – 450 கிராம்) என மொத்தம் 2550 முதல் 2600 கிராம் எடையுள்ள காய்கறிகள் வழங்கப்படவுள்ளன.

பண்டிகைக் காலத்தில் காய்கறிகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், நடுத்தர மக்களின் சுமையைக் குறைக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மலிவு விலை காய்கறித் தொகுப்பானது வருகிற நவம்பர் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 7-ஆம் தேதி வரை குறிப்பிட்ட கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in