“ஒருவேளை நான் தேர்தலில் போட்டியிட்டிருந்தால்” இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சிக்கு பலத்த அடி… டொனால்ட் டிரம்ப் ஆவேசப் பதிவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஒருவேளை நான் தேர்தலில் போட்டியிட்டிருந்தால்” இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சிக்கு பலத்த அடி… டொனால்ட் டிரம்ப் ஆவேசப் பதிவு..!!

Published

on

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சி கடுமையான தோல்விகளைச் சந்திக்கும் என ஊடகக் கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது முதல் எதிர்வினையை ஆக்ரோஷமாகப் பதிவு செய்துள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “இந்தத் தேர்தலில் எனது பெயர் இடம்பெறவில்லை, ஒருவேளை நான் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் நாங்கள் மிகப்பெரிய வரலாற்று வெற்றியைப் பெற்றிருப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் இரண்டாவது அதிபர் பதவிக்காலத்தில் நிலவும் வாழ்வாதாரச் செலவுகள் அதிகரிப்பு, வரிக் கொள்கைகள் மற்றும் ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளது போன்ற காரணங்களால் மக்கள் மத்தியில் குடியரசுக் கட்சி மீதான அதிருப்தி அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக, எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையைக் (House) கைப்பற்றுவதுடன், செனட் சபையிலும் பெரும்பான்மையைப் பிடிக்கும் நிலைக்கு முன்னேறியுள்ளது.

Advertisement

இந்தத் தேர்தலில் டிரம்ப் நேரடியாக ஆதரவு அளித்த பல முக்கியக் குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் தோல்வியைச் சந்தித்துள்ளனர். குறிப்பாக ஓஹியோ மாநில ஆளுநர் தேர்தலில் விவேக் ராமசாமியும், வட கரோலினா மற்றும் தெற்கு கரோலினா மாநில செனட் தேர்தல்களில் டிரம்ப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களும் ஜனநாயகக் கட்சியினரிடம் வீழ்ந்துள்ளது டிரம்ப் நிர்வாகத்திற்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in