LATEST NEWS
தீபாவளிக்கு முன்கூட்டியே ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகையா..? சமூக வலைத்தளங்களில் பரவிய செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அரசு..!!
தீபாவளி பண்டிகை வரும் 8ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நவம்பர் மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 முன்கூட்டியே வழங்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் பரவி வந்த தகவல் முற்றிலும் தவறானது என தமிழக அரசு திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளது. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இந்தத் தொகையை முன்கூட்டியே வழங்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு அரசிடம் இல்லை என்று அரசுத் தரப்பு அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.
இதனால், வழக்கமான நடைமுறையின்படியே இந்த மாதத்திற்கான உரிமைத் தொகையும் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட உள்ளது. அதன்படி, வருகிற நவம்பர் 15ஆம் தேதியன்று தகுதியுள்ள அனைத்துப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளிலும் உரிமைத் தொகை ரூ.1,000 நேரடியாக வரவு வைக்கப்படும் என்று அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
