குஷியோ குஷி..! மகளிர் உரிமைத் தொகை எப்போது தெரியுமா..? தமிழக மகளிருக்கு தமிழக அரசு குட் நியூஸ்.!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குஷியோ குஷி..! மகளிர் உரிமைத் தொகை எப்போது தெரியுமா..? தமிழக மகளிருக்கு தமிழக அரசு குட் நியூஸ்.!!

Published

on

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த மாதத்திற்கான உரிமைத் தொகை வரும் நவம்பர் 15ஆம் தேதி அன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படவுள்ளது.

முன்னதாக, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்தத் தொகை முன்கூட்டியே பயனாளிகளுக்கு வழங்கப்படும் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. இதனால், பண்டிகைக்கு முன்னதாகவே பணம் கிடைக்கும் எனப் பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

Advertisement

ஆனால், தீபாவளியை முன்னிட்டு முன்கூட்டியே பணம் வழங்கப்படாது என அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு அந்தத் தகவல் மறுக்கப்பட்டது. மேலும், இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்ட நிலையில், வழக்கம்போல நவம்பர் 15ஆம் தேதி உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in