LATEST NEWS
அடப்பாவிங்களா பகல் கொள்ளையா இருக்கே..! சாப்பிட்டுவிட்டு மிச்ச உணவை எடுத்துச் செல்ல ரூ.560 கட்டணம்… பிரபல ஹோட்டலில் நடந்த நூதன மோசடி..!!
அமெரிக்காவின் வட கரோலினா மாகாணம் சார்லட் நகரில் உள்ள ‘STATS’ என்ற பிரபல உணவகத்தில், வாடிக்கையாளர் ஒருவர் சாப்பிட்டது போக மிச்சமான உணவை வீட்டிற்கு எடுத்துச் செல்ல பார்சல் கேட்டுள்ளார். இதற்காக அவரிடம் 6 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.560) கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உணவகத்தின் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த அந்த வாடிக்கையாளர், தனக்கு வழங்கப்பட்ட கட்டண ரசீதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். இந்தப் பதிவு இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில், பார்சல் செய்வதற்கு இவ்வளவு பெரிய தொகையை வசூலிப்பதா எனப் பலரும் உணவகத்திற்கு எதிராகத் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, உணவக நிர்வாகம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. அதில், புதன்கிழமைகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ‘பாதி விலை பாஸ்தா’ சலுகையை ஈடுகட்டி, கட்டணத்தைச் சரிசெய்யவே அந்த 6 டாலர்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
