LATEST NEWS
குட் நியூஸ்..! மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 எப்போது..? அமைச்சர் ஜெகதீஸ்வரி மகிழ்ச்சி செய்தி..!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கண்மாய் பட்டியில் ₹30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட சமுதாயக் கூடக் கட்டடத்தைச் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், தவெக அரசு தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை முதலமைச்சர் விஜய் படிப்படியாக நிறைவேற்றி வருவதாகவும், அதன் ஒரு பகுதியாகக் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹2,500 வழங்கும் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் விரைவில் அரசாணையாக வெளியிடப்பட்டு அமல்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, சமீபநாட்களாகப் பரவி வரும் “நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருகிறார்” என்ற செய்திகள் குறித்துப் பேசினார். ஜனநாயகம் நிறைந்த இந்த நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கவும் மக்கள் பணியாற்றவும் உரிமை உள்ளது எனக் குறிப்பிட்ட அவர், நடிகர் தனுஷ் முறைப்படி அரசியலுக்கு வந்தால் அவரைத் தவெக சார்பாக மனப்பூர்வமாக வரவேற்போம் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
