ஒழுக்கம் பேசும் அமைச்சர் கையில் சிகரெட் டாட்டூவா..? இப்போ நான் பொறுப்பான அமைச்சர் பா… சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த அமைச்சர் ஜெகதீஸ்வரி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஒழுக்கம் பேசும் அமைச்சர் கையில் சிகரெட் டாட்டூவா..? இப்போ நான் பொறுப்பான அமைச்சர் பா… சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த அமைச்சர் ஜெகதீஸ்வரி..!!

Published

on

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அயன்ரெட்டியாபட்டி அரசு தொடக்கப் பள்ளியின் சுற்றுச்சுவர் அமைக்கும் விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பங்கேற்றார். அப்போது மாணவர்களின் ஒழுக்கம் குறித்துப் பேசிய அவர், பள்ளி மாணவர்கள் தப்பு தப்பாக முடிவெட்டி வந்தால் முதலில் அவர்களைப் பள்ளிக்குள் அனுமதிக்காமல் மொட்டை அடித்துவிடுங்கள், இதில் தப்பே இல்லை என்று கூறினார். அமைச்சரின் இந்த விசித்திரமான பேச்சு கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் இடையே கடும் எதிர்ப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சரின் இந்த ஒழுக்கப் பேச்சைத் தொடர்ந்து, அவரது கையில் இருக்கும் பழைய டாட்டூ ஒன்று தற்போது அரசியல் களத்தில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. அமைச்சர் ஜெகதீஸ்வரி முன்னதாக தமிழக முதலமைச்சர் விஜய்யின் தீவிர ரசிகையாக விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்தபோது, விஜய் சிகரெட் புகைப்பது போன்ற ஒரு புகைப்படத்தைத் தனது கையில் டாட்டூவாகக் குத்தியுள்ளார். முதலமைச்சர் புகைப்பிடிக்கும் படத்தை டாட்டூவாக வைத்துக் கொண்டு, பள்ளியில் மாணவர்களுக்கு ஒழுக்கம் பற்றிப் பேசுவதா என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி விமர்சித்து வருகின்றனர்.

Advertisement

இந்த சர்ச்சை டாட்டூ குறித்து அமைச்சர் ஜெகதீஸ்வரி முன்பு அளித்த பேட்டியில், தனது அண்ணனாகக் கருதும் முதலமைச்சர் விஜய்யின் அந்தப் புகைப்படம் பொதுவெளியில் தடை செய்யப்பட்டதால், அவரது தீவிர ரசிகையாக அதனைத் தனது கையில் டாட்டூவாக வரைந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த டாட்டூ அவர் பல வருடங்களுக்கு முன்பு ஒரு ரசிகையாகத் தனது சுய விருப்பத்தின் பேரில் குத்திக் கொண்டது என்றும், தற்போது அவர் பொது வாழ்க்கையில் ஒரு பொறுப்புள்ள அமைச்சராக மாறி, மாணவர்கள் மீதான அக்கறையிலேயே மொட்டை அடிக்கச் சொன்னதாகவும் அந்தச் செய்திக்குறிப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in