CRIME
“இவனுக்கெல்லாம் எதுக்கு பைக்..?” அசுர வேகத்தில் பாய்ந்த பைக்.. சாலையோரம் நடந்த மூதாட்டிக்கு நேர்ந்த பயங்கரம்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலையின் மறுபக்கத்தில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டி மீது, அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று மிகக் கொடூரமாக மோதி தள்ளிய விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் நெஞ்சைப் பதறவைக்கும் வகையில் உள்ளன. சாலையின் ஓரத்தில் அமைதியாக நடந்து சென்ற மூதாட்டியை, கட்டுப்பாட்டை இழந்த பைக் ஓட்டி அசுர வேகத்தில் வந்து நேரடியாக மோதிய விபரீதம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கோர விபத்தில் தூக்கி வீசப்பட்ட அந்த மூதாட்டி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பைக் ஓட்டிய நபர் கவனக்குறைவாகவும், அசுர வேகத்திலும் வாகனத்தை இயக்கியதே இந்த விபத்துக்கு முக்கியக் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக உள்ளூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகன ஓட்டி மீது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
