என்னை கிண்டல் பண்ணுறாங்க… நீங்க மட்டும் என்ன எல்லாம் கத்துக்கிட்டா வந்தீங்க..? அடுத்த கூட்டத்தில் எப்படி பேசுறேன்னு பாருங்க… அமைச்சர் ஜெகதீஸ்வரி அதிரடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்னை கிண்டல் பண்ணுறாங்க… நீங்க மட்டும் என்ன எல்லாம் கத்துக்கிட்டா வந்தீங்க..? அடுத்த கூட்டத்தில் எப்படி பேசுறேன்னு பாருங்க… அமைச்சர் ஜெகதீஸ்வரி அதிரடி..!!

Published

on

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சமூக நலம் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே. ஜெகதீஸ்வரி உரையாற்றிய போது, அவர் வாசித்த குறிப்புகளில் சில தடுமாற்றங்கள் ஏற்பட்டன. பேரவைக்குத் தான் புதியவர் என்பதால் இத்தகைய தடுமாற்றங்கள் ஏற்படுவது இயல்பானது என்று குறிப்பிட்ட அவர், இதை வைத்து சமூக வலைத்தளங்களில் தங்களைக் கேலி செய்பவர்களுக்குத் தனது பேச்சின் மூலம் துணிச்சலாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

“சட்டப்பேரவைக்கு நான் புதியவள். நான் தைரியமான பெண்ணாக இருந்தாலும், இவ்வளவு பெரிய மன்றத்தில் முதல்முறையாகப் பேசும்போது சில தடுமாற்றங்கள் வருவது சகஜம் தான்” என்று கூறியுள்ள அவர், தம்மைக் கிண்டல் செய்தவர்கள் எடுத்தவுடனேயே அனைத்தையும் கற்றுக்கொண்டு வரவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தில் என்னுடைய பேச்சு துணிச்சலாக இருக்கும் என்று மிகவும் போல்டாகத் தனது உறுதியை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in