“இனி வேலைக்கு வர வேண்டாம்…” காலில் அடிபட்டதற்கு 1 வாரம் லீவ் கேட்ட பெண்.. வேலையை விட்டே தூக்கிய நிறுவனம்.. ரெடிட்டில் வைரலாகும் அதிர்ச்சி சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இனி வேலைக்கு வர வேண்டாம்…” காலில் அடிபட்டதற்கு 1 வாரம் லீவ் கேட்ட பெண்.. வேலையை விட்டே தூக்கிய நிறுவனம்.. ரெடிட்டில் வைரலாகும் அதிர்ச்சி சம்பவம்..!!

Published

on

பிரைவேட் வேலையில் பணிபுரியும் பலருக்கு மருத்துவ விடுப்பு எடுப்பது பல சமயங்களில் பெரும் சிக்கலாக மாறிவிடுகிறது. குறிப்பாக, சிறு நிறுவனங்களில் ஊழியர்களின் விடுப்பு விஷயத்தில் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் எப்போதும் கேள்விக் குறியாகவே இருக்கின்றன. தற்போது இதுதொடர்பான ஒரு சம்பவம் சமூக வலைதளமான ரெவிட்டீல் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 28 வயதுடைய இளம் பெண் ஒருவர் தனது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒரு வார கால மருத்துவ விடுப்பு கேட்டதற்காக, வேலை நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறி ஆன்லைனில் தனது வேதனையைப் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பெண் தனது பதிவில், எதிர்பாராதவிதமாகத் தனது காலில் கடுமையான தசைப் பிடிப்பு ஏற்பட்டதாகவும், அதனால் நடக்க முடியாத அளவுக்கு அவதிப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் நிலைமையைப் புரிந்து கொண்டு தனக்கு ஒரு வார மருத்துவ விடுப்பு வழங்குமாறு அவர் நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார். மேலும், தீபாவளி பண்டிகைக்குப் பிறகு தான் மீண்டும் பணிக்குத் திரும்புவதாகவும் நிர்வாகத்திற்கு அவர் உறுதியளித்திருந்தார். ஆனால், இந்த விடுப்பு விண்ணப்பத்தினால் ஆத்திரமடைந்த நிர்வாகம், அவரைப் பணியிலிருந்து அதிரடியாக நீக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

தற்போது நிலவும் பொருளாதாரச் சூழலில் வேலைவாய்ப்பைப் பெறுவது கடினமாக உள்ள நிலையில், திடீரென வேலை இழந்ததால் அந்தப் பெண் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். தனது பெற்றோரிடம் இந்தச் செய்தியைச் சொன்னால் அவர்கள் மிகவும் வருந்துவார்கள் என்பதால், இன்னும் அவர்களிடம் தனது வேலை போன விஷயத்தை அவர் தெரிவிக்கவில்லை. இதற்கிடையில், ரெவிட்டீல் அவர் பகிர்ந்துள்ள இந்தச் செய்தி இணைய பயனர்கள் மத்தியில் இரண்டு பிரிவாக விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. சில பயனர்கள் நிறுவனத்தின் நடவடிக்கையைக் கண்டித்து அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், சிலர் இக்கட்டான சூழ்நிலையில் மன உறுதியுடன் எதிர்கொண்டு புதிய வேலைக்கு முயற்சிக்க வேண்டும் என அறிவுரை வழங்கி வருகின்றனர்.

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in