CINEMA
“என் படத்த 3 முறை ரிஜெக்ட் பண்ணாங்க..” மேடையிலேயே நஸ்ரியா குறித்து ஓப்பனாக பேசிய சூர்யா..!!
சூர்யா பங்கேற்ற ‘சீன்’ பட விழாவில், நஸ்ரியா தன்னுடன் நடிக்க மூன்று முறை மறுத்ததாகத் தெரிவித்துள்ளார். நஸ்ரியா எனது 3 படங்களை மறுத்த பிறகு ஒருவழியாக இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்றும், 12 ஆண்டுகளாக அவர் பல தமிழ் படங்களுக்கு ‘No’ சொல்லியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இந்தப் படத்தை ஒப்புக்கொண்டு நடித்ததற்கு நன்றி தெரிவித்த சூர்யா, ஒரு நடிகராக நஸ்ரியாவுக்கு இருக்கும் தன்னம்பிக்கை மற்றும் தெளிவு ஆகியவை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் பாராட்டிப் பேசினார்.
