CINEMA
“முட்டாள்களுக்கு பதில் சொல்லாதீங்க” நாமும் முட்டாள் ஆகிடுவோம்… ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சூர்யா சொன்ன அட்வைஸ்…!!
நடிகர் சூர்யா தனது ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசுகையில், “முட்டாள்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்” என்று சமூக வலைத்தளங்களில் தேவையற்ற விமர்சனங்களைச் பரப்புபவர்கள் குறித்து மிகவும் ஓப்பனாகப் பேசியுள்ளார். சமூக ஊடகங்களில் யாராவது ஒரு முட்டாள் ஒரு பதிவைப் போட்டதற்கு நாம் பதில் சொல்லிக் கொண்டிருந்தால், நாமும் முட்டாளாகிவிடுவோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தகைய நபர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்றோ அல்லது அவர்களை மாற்ற வேண்டும் என்றோ நினைப்பது மிகவும் கடினமான காரியம் என்று சூர்யா தெரிவித்துள்ளார். எனவே, “அவர்கள் அவங்களாகவே இருக்கட்டும்” என்று விட்டுவிடுவதே நல்லது எனத் தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
நாம் சொல்வது சில பேருக்கு மட்டுமே புரியும், பலருக்குப் புரியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அதனால் ரசிகர்கள் தங்களது நேரத்தையும் ஆற்றலையும் அத்தகைய நபர்களிடம் வீணடிக்க வேண்டாம் என்று சூர்யா இந்த நிகழ்வில் உருக்கமாகக் கேட்டுக் கொண்டுள்ளார்.
