LATEST NEWS
அடக்கடவுளே..! அவன் வரலைன்னா செத்துருவேன்.. 6 மாத லிவ்-இன் உறவை சாதிக்காக கைவிட்ட காதலன்.. காவல் நிலையத்தில் கதறும் இளம் பெண்..! நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
பெங்களூரில் காதலனுடன் லிவ்-இன் உறவில் வசித்து வந்த கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னைத் திருமணம் செய்ய மறுத்துவிட்டு தலைமறைவான காதலனைக் கண்டுபிடித்துத் தரும்படி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசர்கோட்டைச் சேர்ந்த நிஷ்மாவும், கர்நாடகாவைச் சேர்ந்த சூர்யாவும் பெங்களூரில் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்தபோது காதலித்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களாக ஒரே அறையில் வசித்து வந்த இவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருந்த நிலையில், சாதி மறுப்பு காரணமாக சூர்யாவின் பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்தினரின் வற்புறுத்தலால் கடந்த செப்டம்பர் 24 அன்று தனது கைபேசியை வீட்டிலேயே வைத்துவிட்டு சூர்யா தலைமறைவானது நிஷ்மாவை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து மகாலட்சுமி லேஅவுட் காவல் நிலையத்தில் நிஷ்மா புகார் அளித்துள்ள நிலையில், “வியாழக்கிழமை வரை காத்திருப்பேன், அவர் வராவிட்டால் இந்த உலகில் இருக்க மாட்டேன்” என்று அவர் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், தலைமறைவான சூர்யாவைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சாதிப் பிரச்சினை மற்றும் குடும்ப எதிர்ப்பின் காரணமாக லிவ்-இன் உறவில் இருந்த பெண் நடுரோட்டில் கைவிடப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் விவாதப் பொருளாகியுள்ளது.
