“ஐயோ பாவம்.. விநாயகர் பந்தலில் பயங்கர கொடூரம்..” தூங்கிக் கொண்டிருந்த 4 இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்…!! – cinefeeds
Connect with us

CRIME

“ஐயோ பாவம்.. விநாயகர் பந்தலில் பயங்கர கொடூரம்..” தூங்கிக் கொண்டிருந்த 4 இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்…!!

Published

on

மத்திய பிரதேச மாநிலம் மண்ட்லா மாவட்டம் ஹிராபூர் கிராமத்தில் விநாயகர் சிலை கரைப்பு பந்தலில் மின்சாரம் பாய்ந்த விபத்தில் 4 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அங்கு வைக்கப்பட்டிருந்த சிலைகள் நீர்நிலையில் கரைக்கப்பட்ட பிறகு, சிலை அமைப்புக் குழுவைச் சேர்ந்த 8 இளைஞர்கள் வேலை முடிந்த அசதியில் பொருட்களைப் பாதுகாப்பதற்காக அந்தப் பந்தலிலேயே படுத்துத் தூங்கியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாகப் பந்தலுக்கு மேலே சென்ற உயர்அழுத்த மின்ஒயர் அறுந்து, தூங்கிக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது விழுந்ததில் மின் கசிவு ஏற்பட்டு ஜைன் பான்வரே (19), ரவி ஜாரியா (24), கிருஷ்ணகுமார் பான்வரே (18), வீரேந்திர பான்வரே (24) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இந்தக் கொடூர விபத்தில் மேலும் 3 பேர் காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், பிரியான்ஷூ என்ற இளைஞரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று மத்திய பிரதேசத்தின் கந்த்வா மாவட்டத்திலும் நடந்த மற்றொரு சோகச் சம்பவத்தில், விநாயகர் சிலை கரைப்பின் போது நீரில் மூழ்கி 2 இளைஞர்கள் பலியாகியுள்ளனர். விநாயகர் வழிபாட்டின் இறுதியில் நடந்த இந்த அடுத்தடுத்த மரணச் சம்பவங்கள் அப்பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in