CRIME
அடப்பாவிங்களா காதலித்தது குத்தமா..? இளைஞரை கொன்று உடலில் கல்லை கட்டி கிணற்றில் வீசிய கொடூரர்கள்… சென்னையில் பயங்கரம்..!!
சென்னை ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட மாங்காடு பகுதியில், காதல் விவகாரம் காரணமாக 20 வயது இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டு, அவரது உடலில் கல்லைக் கட்டி கிணற்றில் வீசப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த யுவனேஷ் (20) என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மாங்காடு காவல் நிலைய எல்லைக்குள் (T-14 Mangadu Police Station) இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக்கொலை வழக்கு தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த தேவதயாளன் (20) மற்றும் பார்த்திபன் (26) ஆகிய இருவரை மாங்காடு போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் கொலைக்கான காரணம் மற்றும் பின்னணி குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
