LATEST NEWS
“நடுவானில் ரகளை” விமானப் பணிப்பெண்ணிடம் இனவெறி பேச்சுகள்… இருக்கையோடு சேர்த்து டேப்பால் சுற்றிக்கட்டிய பயணிகள் – வைரல் வீடியோ..!!!
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கருப்பின பெண் விமானப் பணிப்பெண்ணை நோக்கி இனவெறி மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிரான அவதூறு வார்த்தைகளைப் பேசி வன்முறையில் ஈடுபட்ட பயணி ஒருவர் இருக்கையோடு சேர்த்து டக்ட் டேப்பால் கட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டல்லாஸ் நகரிலிருந்து நெவார்க் நோக்கிச் சென்ற அந்த விமானத்தில், போதையில் இருந்ததாகக் கூறப்படும் அந்த நபர் சக பயணி ஒருவரைத் தாக்கியதுடன், நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்ற பெண் பயணி ஒருவரையும் தள்ளிவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக பயணிகள் மற்றும் விமானக் குழுவினர் டக்ட் டேப் மற்றும் ஜிப் டைகளைப் பயன்படுத்தி அவரை இருக்கையோடு சேர்த்து இருக்கமாகக் கட்டி வைத்தனர்.
இந்தக் கடுமையான மோதல் மற்றும் பரபரப்பான சூழல் காரணமாக, விமானம் அவசரமாக பால்டிமோர்/வாஷிங்டன் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. விமானம் தரையிறங்கியதும், அங்கு தயாராக இருந்த மேரிலாண்ட் போக்குவரத்து காவல்துறையினர் விமானத்திற்குள் நுழைந்து அந்தப் பயணியைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். தற்போது அவர் மீது மாநில அளவிலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது கூட்டாட்சி குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வது குறித்து எஃப்.பி.ஐ அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
