CRIME
“போய் ஆற்றில் விழுந்து செத்துரு ..!” 12 வயது மகளை கொடூரமாக சீரழித்த 61 வயது முதியவர்… தந்தை சொன்ன அதிர்ச்சி வார்த்தை.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
அடானா மாகாணத்தின் ஃபேகே மாவட்டத்தில், 12 வயது சிறுமி ஒருவரை அவரது 61 வயது அண்டை வீட்டுக்காரர் 4-ஆம் வகுப்பில் இருந்தே பாலியல் வன்புணர்வு செய்து வந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இக்கொடூரத்தை அச்சிறுமி தனது பள்ளி ஆசிரியரிடம் விவரித்துக் கூறியுள்ளார். முன்னதாக, இப்பாதிப்பு குறித்து சிறுமி தனது தந்தையிடம் கூறியபோது, அவர் ஆதரவாக நிற்பதற்குப் பதிலாக, “போய் ஆற்றில் விழுந்து உயிரை விடு” என்று கூறியதாகத் தெரிகிறது.
ஆசிரியரின் தகவலைத் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் சமூக சேவைத் துறையினர் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது அரசின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த கொடூர செயலில் ஈடுபட்ட அண்டை வீட்டுக்காரரான முதியவரும், மகளுக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டும் உதவ மறுத்து அலட்சியமாகப் பேசிய சிறுமியின் தந்தையும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
