LATEST NEWS
800-க்கும் மேற்பட்ட வண்டுகள் கொட்டிய கொடூரம்… ஆட்டுக்குட்டியைக் காப்பாற்றப் போய் கிணற்றுக்குள் துடிதுடித்து இறந்த மாவீரன்..!!
யேமனின் வசாப் மாவட்டத்தைச் சேர்ந்த யூசுப் முஹம்மது காசிம் அல்-வஸாபி (அல்-முதஹிரி) என்ற இளைஞர், ஆபத்தில் சிக்கிய ஒரு வாயில்லா ஜீவனைக் காப்பாற்றப் போய் தனது உயிரையே தியாகம் செய்த நெஞ்சை உருக்கும் சோகச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாழடைந்த ஆழமான கிணறு ஒன்றில் ஆட்டுக்குட்டி ஒன்று தவறி விழுந்து உயிருக்குத் போராடிக் கொண்டிருப்பதை யூசுப் கண்டுள்ளார். அந்த பலவீனமான விலங்கை எவ்வாறேனும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில், சிறிதும் யோசிக்காமல் ஆபத்தான அந்தப் பாழடைந்த கிணற்றுக்குள் அவர் துணிச்சலாக இறங்கியுள்ளார்.
ஆனால், கிணற்றின் இருளுக்குள் யூசுப் இறங்கிய போது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த களவண்டுகளின் பெருங்கூட்டம் ஒன்று அவரை ஆக்ரோஷமாகத் தாக்கியுள்ளது. அவரது உடல் முழுவதும் 800-க்கும் மேற்பட்ட கொடூரமான கொட்டுக்களை வாங்கி, கடுமையான வலியையும் வேதனையையும் பொறுத்துக் கொண்டு அவர் போராடியபோதிலும், துரதிர்ஷ்டவசமாக சம்பவ இடத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. ஒரு உயிரைக் காக்கத் தன் உயிரைத் தந்த இந்த மாவீரனின் தியாகத்தை எண்ணி வசாப் பகுதி மக்களும் அவரது குடும்பத்தினரும் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியுள்ளனர்.
