LATEST NEWS
“அச்சச்சோ.. மாணவியை மொத்தமாகச் சூழ்ந்த ராட்சத தேனீக்கள்…” உயிரைப் பணயம் வைத்து டெலிவரி பாய் செய்த நெகிழ்ச்சி காரியம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
பிரேசில் நாட்டின் இபிரிட்டே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றின் முன்பாக, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மீது தேனீக்கள் கூட்டம் திடீரென கொடூரத் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலின் போது, பயத்தின் காரணமாக நகர முடியாமல் ஒரே இடத்தில் உறைந்துபோய் நின்ற ஒரு பள்ளி மாணவியை தேனீக்கள் மொத்தமாகச் சூழ்ந்து கடித்தன. இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அச்சிறுமியைக் காப்பாற்ற உடனடியாக ஓடி வந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த டெலிவரி ஊழியர் ஒருவர், தன் கையில் இருந்த ஸ்பிரே மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி சிறுமியைத் தேனீக்களின் பிடியில் இருந்து தைரியமாக மீட்டார். அதன் பிறகு, அங்கிருந்த பொதுமக்கள் சிறுமியின் மீது தண்ணீர் குழாய் மூலம் தண்ணீரைப் பாய்ச்சி தேனீக்களை விரட்டினர்.
இந்த ஆபத்தான மீட்புப் போராட்டத்தின் போது, சிறுமியைக் காப்பாற்றிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரைத் தேனீக்கள் சுமார் 40 இடங்களில் கொட்டின. அதே நேரத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட தேனீக் கடிகளால் கடுமையான பாதிப்புக்குள்ளான அந்தப் பள்ளி மாணவி உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது, அந்தத் தைரியமான டெலிவரி ஊழியர் மற்றும் பள்ளி மாணவி ஆகிய இருவருக்குமே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
