LATEST NEWS
அவங்க அம்மாவை ஏன் இழுக்குறீங்க..? ஆபாசமாகப் பேசிய ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செஞ்சது சரிதான்.. திமுகவுக்கு எதிராக கொந்தளித்த பிரேமலதா..!!
ஆபாசமாகப் பேசிய திமுக எம்பி ஆ.ராசா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது சரியான முடிவுதான் எனத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், பொதுவெளியில் பெண்களை அவதூறாகப் பேசுபவர்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை தேவையானது என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் விமர்சனங்களுக்காகக் குடும்பத்தினரை இழுப்பது கண்டிக்கத்தக்கது எனக் கூறிய அவர், “உங்கள் அரசியலுக்கு அமைச்சர் நிர்மல்குமார் அம்மா என்ன செய்தார்கள்?” என்று கேள்வி எழுப்பினார். பெற்ற தாய் குறித்து பொதுவெளியில் ஆபாசமாகப் பேசும் உரிமை யாருக்கும் கிடையாது என்றும், அப்படிப் பேசிய ஆ.ராசாவையும் பெற்றெடுத்தது ஒரு தாய்தான் என்பதைக் மறந்துவிடக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், கையில் மைக் கிடைத்துவிட்டது என்பதற்காக, வாய்க்கு வந்தபடி என்னென்னவோ பேசக் கூடாது என ஆ.ராசாவின் பேச்சுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார். அரசியல் நாகரிகத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், பெண்களை இழிவுபடுத்துவதை அரசியல் தலைவர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
