CRIME
நாடே அதிர்ச்சி..! போலீசார் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி துடிதுடித்து பலி… 6 போலீசார் சஸ்பெண்ட்..!!
உத்தரப் பிரதேச மாநிலத்தில், போலீசார் எட்டி உதைத்ததில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருட்டு வழக்கு ஒன்றில் கணவரை நள்ளிரவில் போலீசார் கைது செய்ய முயன்றபோது, அஞ்சலி (28) என்ற கர்ப்பிணிப் பெண் அதை தொடுத்துள்ளார்.
அப்போது அங்கு வந்த காவல் ஆய்வாளர் தர்மபால சிங்க் அந்தப் பெண்ணின் வயிற்றில் பலமாக எட்டி உதைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடுமையான வயிற்று வலியால் துடித்த அந்தப் பெண் உடனடியாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அவருக்குப் பிரசவம் நடைபெற்ற போதிலும், சிகிச்சைப் பலனின்றி அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த அதிர்ச்சி சம்பவத்தை அடுத்து, பொதுமக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, அத்துமீறலில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் உட்பட 6 போலீசார் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
