CRIME
அய்யோ கொடுமையே.. சிகரெட்டில் கஞ்சா கலந்து மயக்கமடையச் செய்து கொடூரம்… 16 வயது சிறுமியை மாறிமாறி சீரழித்த கும்பல்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
ஹைதராபாத்தில் 16 வயது சிறுமிக்கு போதைப்பொருள் கொடுத்து, பல்வேறு இடங்களில் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தந்தையின் கண்டிப்பால் செப்டம்பர் 9 அன்று வீட்டை விட்டு வெளியேறிய அச்சிறுமி, சமூக ஊடகம் மூலம் அறிமுகமான நபர்களைச் சந்தித்துள்ளார். அப்போது அவருக்கு சிகரெட்டில் கஞ்சா கலந்து கொடுத்து மயக்கமடையச் செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன் பின்னரும், விடுதி, காலி ரயில் பெட்டி எனப் பல இடங்களுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டுப் பலரால் தொடர்ந்து சீரழிக்கப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி குற்றவாளிகளின் பிடியில் இருந்து தப்பித்து வீடு திரும்பிய சிறுமி, தனது குடும்பத்தினருடன் காவல் நிலையத்தை அணுகிப் புகாரளித்துள்ளார். இந்த வழக்கில் போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிறுவர்கள் உட்பட 8 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும், முறையான சோதனையின்றி அறை வழங்கிய விடுதி உரிமையாளர் மற்றும் மேலாளரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக இருக்கும் 9-வது குற்றவாளியைத் தேடும் பணியிலும், அவர்களுக்குப் போதைப்பொருள் சப்ளை செய்தவர்களைக் கண்டறியும் பணியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
