“என் கூட வரமாட்டியா அப்போ சாவு” குடும்பம் நடத்த வரமறுத்த மனைவி.. தடுத்த மாமனார், மாமியாருக்கு நேர்ந்த கொடூரம்… நெஞ்சை பதறவைக்கும் துணிகரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் கூட வரமாட்டியா அப்போ சாவு” குடும்பம் நடத்த வரமறுத்த மனைவி.. தடுத்த மாமனார், மாமியாருக்கு நேர்ந்த கொடூரம்… நெஞ்சை பதறவைக்கும் துணிகரம்..!!

Published

on

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே உள்ள இடப்பற்றை கிராமத்தைச் சேர்ந்தவர் ரேகா. இவருக்கும் இவரது கணவர் ராஜேஷுக்கும் இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாக, ரேகா தனது கணவரைப் பிரிந்து பெற்றோர் ரவி மற்றும் சாந்தியுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று ரேகாவின் வீட்டிற்குச் சென்ற ராஜேஷ், தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அவரை அழைத்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கடுமையான தகராறாக மாறியுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி ரேகாவை வெட்டியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து தடுக்க வந்த மாமனார் ரவி மற்றும் மாமியார் சாந்தி ஆகியோரையும் அவர் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த மூவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆர்.கே.பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய மருமகன் ராஜேஷைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். குடும்பத் தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கத்தியால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in