CRIME
“அப்பா சொல்றத கேளுங்க..” சொந்த மகள்களை 9 ஆண்டுகளாக சீரழித்த தந்தை… கண்மூடி வேடிக்கை பார்த்த தாய்க்கு நேர்ந்த கதி… மகளின் கள்ளக்காதலனால் வெளிவந்த ரகசியம்..!!
சொந்த மகள்களை 9 ஆண்டுகளாக பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய கணவருக்கு உடந்தையாக இருந்த ரஷ்யத் தாய் ஒருவருக்கு நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 36 வயதான ரோமன் கிராசிகோவ் என்ற தந்தை, தனது மகள்களுக்கு 9 வயதாக இருக்கும் போதிலிருந்தே இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளார். இதற்கு அவரது மனைவி டட்யானா கிராசிகோவா (35) முழுமையாக உடந்தையாக இருந்துள்ளார்.
மகள்கள் இதுகுறித்து தாயிடம் அழுதபோதும், “அப்பா குடும்பத்தைக் காப்பாற்றுபவர், அதனால் அவர் சொல்வதைக் கேட்டு நடங்கள்” என்று டட்யானா வற்புறுத்தியுள்ளார். இந்த கொடூரங்கள் அனைத்தும் தாயின் கண் முன்னாலேயே நடந்து வந்துள்ளன. வெளி உலகுக்கு இந்த குடும்பம் 12 குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்வது போலத் தோன்றினாலும், உள்ளே பல ஆண்டுகளாக இந்த அவலம் மறைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கல்லூரிக்குச் சென்ற மூத்த மகள், தாங்கள் அனுபவித்து வந்த கொடுமைகளைத் தனது காதலனிடம் வெளிப்படுத்தியுள்ளார். அவரது உதவியுடன் காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, விசாரணையில் தந்தை ரோமன் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார். தற்போது குற்றவாளிகளான தந்தை மற்றும் தாய் இருவருக்கும் நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
