“டேய் நிறுத்துடா…” வேற பொண்ணோட ஜாலியா சுற்றிய காதலன்… கார் பானட்லயே தொங்கிட்டு போன காதலி.. நடுரோட்டில் நடந்த சினிமா பட பாணி கூத்து… வைரலாகும் பகீர் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“டேய் நிறுத்துடா…” வேற பொண்ணோட ஜாலியா சுற்றிய காதலன்… கார் பானட்லயே தொங்கிட்டு போன காதலி.. நடுரோட்டில் நடந்த சினிமா பட பாணி கூத்து… வைரலாகும் பகீர் வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவின் கோமதி நகர் பகுதியில் ஓடும் காரின் பானட் மீது ஒரு பெண் தொங்கியபடி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காரை நிறுத்துமாறு அந்தப் பெண் சத்தமிடும் காட்சி அதில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரை ஓட்டிச் சென்ற நபரின் காதலிதான் அந்தப் பெண் என்று கூறப்படுகிறது.

வைரலான இந்த வீடியோ கோமதி நகரில் உள்ள ஜனேஷ்வர் மிஸ்ரா பூங்கா அருகே நடந்த சம்பவமாகும். புதன்கிழமை காலையில் அனாமிகா என்ற பெண் தேநீர் அருந்துவதற்காக அந்தப் பூங்கா பகுதிக்கு வந்துள்ளார். அதே நேரத்தில் அவரது காதலனான ஷாநவாஸ் என்பவரும் தனது காரில் அங்கு வந்துள்ளார். காவல்துறையின் தகவல்படி, ஷாநவாஸுடன் காரில் மற்றொரு பெண்ணும் இருந்துள்ளார். ஏற்கனவே அனாமிகாவிற்கும் ஷாநவாஸிற்கும் இடையே காதல் தொடர்பு இருந்த நிலையில், மற்றொரு பெண்ணுடன் காதலனைப் பார்த்ததும் அனாமிகா ஆத்திரமடைந்துள்ளார்.

Advertisement

https://english.bhaskar.com/KRr0gLXCt6b

இதன் காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றியதை அடுத்து, ஷாநவாஸ் அந்த மற்ற பெண்ணுடன் காரில் ஏறி அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார். அப்போது அனாமிகா காரை மறித்து முன்னால் நின்றுள்ளார். ஆனால், காரை நிறுத்தாமல் ஷாநவாஸ் காரை முன்னோக்கி நகர்த்தியதால், அனாமிகா காரின் பானட் மீது தொங்க நேரிட்டது. காரை நிறுத்துமாறு அவர் அலறியபோதும் கார் தொடர்ந்து சென்றது. சிறிது தூரம் சென்றதும் அனாமிகா காரில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தார். அதன்பின் ஷாநவாஸ் காரை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டார். தற்போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in