அடக்கொடுமையே..! பீடி தரலனு ஆத்திரம்… வாலிபரை கொடூரமாக குத்தி கொன்ற கும்பல்… நெஞ்சை பதறவைக்கும் பகீர் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

அடக்கொடுமையே..! பீடி தரலனு ஆத்திரம்… வாலிபரை கொடூரமாக குத்தி கொன்ற கும்பல்… நெஞ்சை பதறவைக்கும் பகீர் பின்னணி..!!

Published

on

டெல்லியின் கேசவ்புரம் காவல் எல்லைக்குட்பட்ட கன்னையா நகரில் பீடி கேட்பது தொடர்பாக சில இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் திடீரென மோதலாக மாறியது. செப்டம்பர் 15 அன்று நடந்த இச்சம்பவத்தில், தகராறு முற்றவே சிலர் கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் பவானி (30) மற்றும் ஆஷா ராம் (32) ஆகிய இருவர் பலத்த காயமடைந்தனர். உடனே அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பவானி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். காயமடைந்த ஆஷா ராம் சிகிச்சைக்குப் பின் நலமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

குடும்பத்தினரின் கூற்றுப்படி, கன்னையா நகரில் உள்ள மதுபானக் கடை அருகே பவானி பிரசாத்தும் ஆசாராமும் இருந்தபோது, அங்கு வந்த சில இளைஞர்கள் அவர்களிடம் பீடி கேட்டுள்ளனர். பவானி பீடி தர மறுத்ததால் ஆத்திரமடைந்த கும்பல், அவர்கள் இருவரையும் கத்தியால் சரமாரியாகக் குத்தியதாகக் கூறப்படுகிறது. மிகச் சிறிய விஷயத்திற்காகத் தொடங்கிய இந்த வாக்குவாதம், நொடிப் பொழுதில் கொடூரமான தாக்குதலாக மாறியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சம்பவம் குறித்து தகவலறிந்த கேசவ்புரம் காவல் துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பேரைக் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகள் 103(1) மற்றும் 109(1)-ன் கீழ் முதல் தகவல் அறிக்கை (FIR எண்: 321/2026) பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குவாதம் எவ்வாறு வன்முறையாக மாறியது என்பது குறித்தும், பிடிபட்டவர்களிடம் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in