“பயங்கரவாதியின் சிறுநீரில் இருந்து வெடிகுண்டு” செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகையில் வெளிவந்த அதிரவைக்கும் பின்னணி..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பயங்கரவாதியின் சிறுநீரில் இருந்து வெடிகுண்டு” செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகையில் வெளிவந்த அதிரவைக்கும் பின்னணி..!

Published

on

டெல்லி செங்கோட்டையில் கடந்த 2025 நவம்பர் 10 அன்று பயங்கரவாதி உமர் உன் நபி நடத்திய கார் குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து, தேசிய புலனாய்வு முகமை அதிர்ச்சியூட்டும் தகவல்களுடன் கூடிய குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. இந்த கோரத் தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் படுகாயமடைந்தனர். தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளைத் தயாரிக்க, அந்தப் பயங்கரவாதி தனது சொந்தச் சிறுநீரில் இருந்து யூரியாவைப் பிரித்தெடுத்துப் பயன்படுத்தியிருக்கலாம் என்று என்.ஐ.ஏ தனது விசாரணையில் கண்டறிந்துள்ளது.

பயங்கரவாதி உமர் உன் நபியின் பென் டிரைவை ஆய்வு செய்தபோது, அதில் யூரியா நைட்ரேட் மூலம் வெடிபொருட்கள் தயாரிக்கும் முறைகளும், குறிப்பாகச் சிறுநீரில் இருந்து யூரியாவைப் பிரித்தெடுக்கும் மாற்று வழிமுறைகளும் சேமிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவன் தங்கியிருந்த வாடகை அறையில் கடுமையான துர்நாற்றத்துடன் சிறுநீர் நிரம்பிய பாலித்தீன் பை ஒன்று இருந்ததாக நேரில் பார்த்த சாட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் சந்தேகம் வராத வகையில், உள்ளூர் ஆதாரங்களைப் பயன்படுத்தி அவன் வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.

Advertisement

இந்தத் தாக்குதலின் உண்மையான இலக்கு முதலில் ‘லால் மந்திர்’ பகுதியாகவே இருந்துள்ளது. ஆனால், மத்திய டெல்லியில் நிலவிய கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக காரை அங்கு நிறுத்த முடியாததால், கடைசி நிமிடத்தில் திட்டத்தை மாற்றி செங்கோட்டைக்குச் சென்று மாலை 6:50 மணிக்கு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளான். தாக்குதலுக்கு முன்னதாக, கடந்த 2023 முதல் 2025 வரை சுமார் 12 முறை அவன் செங்கோட்டைக்கு வந்து உளவு பார்த்ததும், அப்போது டிஜிட்டல் தடயங்களை மறைக்கத் தனது கைபேசியை அணைத்து வைத்திருந்ததும் என்.ஐ.ஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in