LATEST NEWS
“ஐயோ கடவுளே.. தொழிற்சாலையில் மளமளவென பரவிய தீ..” உயிரை காப்பாற்ற பெண்கள் செய்த அதிரடி காரியம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
டெல்லி ஸ்வரூப் நகர் பகுதியில் ஜூடோ ஆடைகள் மற்றும் பாக்ஸிங் கையுறைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், கட்டிடத்திலிருந்து குதித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 6 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொழிற்சாலையின் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் திடீரென தீப்பிடித்து மளமளவென எரியத் தொடங்கியது. தீயின் வீரியம் அதிகமாக இருந்ததால், கட்டிடத்திற்குள் சிக்கியிருந்த தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். உயிருக்கு அஞ்சிய பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 6 பேர் வேறு வழியின்றி கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்து கீழே குதித்ததில் அவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.
காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், தற்பொழுது அவர்கள் அனைவரும் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தீ விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்திற்கான துல்லியமான காரணம் என்ன மற்றும் அங்கு முறையான தீ பாதுகாப்பு உபகரணங்கள் இருந்ததா என்பது குறித்துப் போலீசார் தற்பொழுது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
