LATEST NEWS
“அம்மாடியோ..! கொஞ்சம் அசந்திருந்தா அவ்வளவுதான்…” டாய்லெட்டுக்குள் படம் எடுத்த 5 அடி நாகப்பாம்பு… அலறியடித்து ஓடிய குடும்பம்..! நடுநடுங்க வைக்கும் சம்பவம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டத்தில் உள்ள சோனாகாட்டி பகுதியில் கே.கே. மாளவியா என்பவர் வசித்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்தில் இவருடைய வீட்டின் கழிப்பறை கதவைத் திறந்தபோது, அங்கு கழிப்பறை இருக்கைக்கு அருகே சுமார் 5 அடி நீளமுள்ள பெரிய நல்லபாம்பு ஒன்று படம் எடுத்து அமர்ந்திருப்பதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். மனிதர்களைக் கண்டதும் அந்தப் பாம்பு பயங்கரமாகச் சீறத் தொடங்கியதால் குடும்பத்தினர் அலறியடித்து ஓடினர்.
சம்பவத்தின் தீவிரத்தைப் புரிந்துகொண்ட குடும்பத்தினர், பாம்பை தாங்களாகவே பிடிக்கவோ அல்லது விரட்டவோ முயற்சிக்காமல் உடனடியாகப் பாம்பு பிடி வீரரான விஷால் விஸ்வகர்மாவிற்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த விஷால், குடும்பத்தினரைப் பாதுகாப்பாக தூர நிற்க வைத்தார். கழிப்பறைக்குள் தொடர்ந்து படம் எடுத்துச் சீறிக்கொண்டிருந்த அந்த ஆபத்தான நல்லபாம்பை அவர் மிகவும் கவனமாகக் கையாளத் தொடங்கினார்.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, அந்த 5 அடி நல்லபாம்பைப் பாம்பு பிடி வீரர் விஷால் விஸ்வகர்மா காயமின்றிப் பாதுகாப்பாக மீட்டு கழிப்பறையிலிருந்து வெளியே கொண்டுவந்தார். இதன் பிறகே குடும்பத்தினர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். கழிப்பறையில் பாம்பு சீறும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. வீடுகளுக்குள் பாம்பு புகுந்தால் பொதுமக்கள் அதனைப் பிடிக்க முயலாமல், உடனடியாகத் பயிற்சி பெற்ற பாம்பு பிடி வீரர்களையோ அல்லது வனத்துறையையோ அணுக வேண்டும் என்றும் இரவு நேரங்களில் இருட்டான பகுதிக்குச் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் பாம்பு பிடி வீரர் கேட்டுக்கொண்டுள்ளார்.
