“என் கணவரை கொன்னுட்டாங்க..!” மருத்துவமனை வாசலில் கதறிய பெண் போலீஸ்.. நெஞ்சை உருக்கும் வாக்குமூலம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் கணவரை கொன்னுட்டாங்க..!” மருத்துவமனை வாசலில் கதறிய பெண் போலீஸ்.. நெஞ்சை உருக்கும் வாக்குமூலம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில், பெண் காவலர் ரிச்சா சர்மாவின் கணவர் சைலேந்திர சர்மா (35), மருத்துவக் கல்லூரி அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார். ஞாயிறு மாலை 6 மணியளவில் சைலேந்திராவிற்கு கடுமையான வயிற்று வலி மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து, ரிச்சா அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு இரு கைகளிலும் ஊசிகள் போடப்பட்டு, இரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்ட பின்னர் வார்டில் அனுமதிக்கப்பட்டார். கணவரின் மோசமான நிலையைக் கருத்தில் கொண்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு அருகிலேயே வார்டு ஒதுக்குமாறு ரிச்சா கோரியும், மருத்துவமனை நிர்வாகம் அவரைத் தொலைவில் உள்ள வார்டுக்கு மாற்றியதாகக் கூறப்படுகிறது. சைலேந்திராவின் மரணத்திற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்று ரிச்சாவும் அவருடைய சகோதரரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். உயிரிழந்த சைலேந்திர சர்மாவின் மனைவி ரிச்சா சர்மா, ரேபரேலியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்தார். 2017ஆம் ஆண்டு முதல் பஹ்ரைச் மாவட்டத்தில் பணியாற்றி வரும் இவர், தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தில் உள்ள பொதுக் குறைதீர்ப்புப் பிரிவில் காவலராகப் பணியாற்றி வருகிறார். இந்தத் துயரச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in