“அவள் முகத்தை பார்க்க மாட்டேன்..” மருமகள் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. மார்ச்சுவரியில் உறைந்த தாயின் உடல்.. நெஞ்சை பிழியும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அவள் முகத்தை பார்க்க மாட்டேன்..” மருமகள் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. மார்ச்சுவரியில் உறைந்த தாயின் உடல்.. நெஞ்சை பிழியும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தின் கன்மாவ் பகுதியைச் சேர்ந்த ரேகா தேவி என்பவர், கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி சைஃபாய் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தத் தகவல் அவரது கணவர் சிவ்நாத் மற்றும் அவரது மூன்று மகன்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், “அவள் 15 ஆண்டுகளுக்கு முன்பே எங்களை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டாள்” எனக் கூறி, அவளது உடலை வாங்க கணவனும் மகன்களும் முற்றிலுமாக மறுத்துவிட்டனர்.

சுற்றமும் நட்பும் போனைத் துண்டித்துவிட்டுத் துரோகம் செய்ததால், ரேகா தேவியின் சடலம் 72 மணி நேரத்திற்கும் மேலாக மார்ச்சுவரியில் அநாதையாகக் கிடந்தது. இதையறிந்த எட்டாவா இரத்தத் தான அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், அந்தத் தாயின் உடலை மீட்டு யமுனை நதிக்கரையில் அவளது இறுதிச் சடங்குகளைச் செய்தனர். சிதை மூட்டப்பட்ட அந்த இறுதி நிமிடத்தில், அந்த அமைப்பினர் ரேகா தேவியின் மருமகளைத் தொடர்பு கொண்டு, “இறுதியாக ஒருமுறை வந்து முகத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று அழைத்தனர். ஆனால், அங்கிருந்து வந்த பதிலோ இன்னும் கொடூரமானது; “நான் அவளைப் பார்க்க வரமாட்டேன்” என்று கூறி அந்தப் பெண் போனைத் துண்டித்தார்.

Advertisement

உறவுகளுக்குள் விரிசல் ஏற்படலாம், கோபங்கள் நியாயமானதாகக் கூட இருக்கலாம். ஆனால், பெற்ற தாயின் சடலம் மார்ச்சுவரியில் அழுகிக் கொண்டிருக்கும்போது, மகன்கள் போனைத் துண்டிப்பதும் மருமகள் மறுப்பதும் மனிதநேயத்தின் மிகப்பெரிய தோல்வியாகும். சொந்த பந்தங்களே முகத்தைத் திருப்பிக் கொண்ட பிறகும், ஒரு பெண் அநாதையாகப் போய்விடக் கூடாது என்று தார்மீகப் பொறுப்பேற்று அவளது இறுதிச் சடங்குகளைச் செய்த அந்த இரத்தத் தான அமைப்பின் இளைஞர்களுக்கு உலகமே தலைவணங்குகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in