CRIME
“பாலியல் தொழில் செய்ய விருப்பம்னு சொல்லு..” அந்தரங்க உறுப்புகளில் தாக்கி கணவன் செய்த வரதட்சணை வெறிச்செயல்.. புது பொண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. பரபரப்பு பின்னணி..!!
திருவனந்தபுரம் நீண்டகராவைச் சேர்ந்த 24 வயது புதுமணப்பெண்ணான அஞ்சு, சவுதி அரேபியாவில் வைத்து வரதட்சணைக் கொடுமையால் கணவரால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் முடிந்த நான்கு மாதங்களேயான நிலையில், கொண்டு வந்த வரதட்சணை பத்தவில்லை எனக் கூறி கணவர் நந்து மற்றும் அவரது குடும்பத்தினர் அஞ்சுவைத் துன்புறுத்தத் தொடங்கியுள்ளனர். கணவனுடன் சவுதி அரேபியா சென்ற பிறகு இந்த உடல் மற்றும் மன ரீதியான அராஜகம் இன்னும் தீவிரமடைந்துள்ளது.
சவுதி அரேபியாவில் இருந்தபோது கணவர் நந்து பிரஷர் குக்கர், கல் மற்றும் லேப்டாப் சார்ஜர் ஒயர்களைக் கொண்டு தன்னை அடிக்கடி கொடூரமாகத் தாக்கியதாக அஞ்சு குற்றம் சாட்டியுள்ளார். இதில் பிரஷர் குக்கரால் தலையில் பலத்த காயமடைந்ததோடு, நந்து தனது வயிற்றில் உதைத்து, அந்தரங்க உறுப்புகளிலும் கொடூரமான தாக்குதல்களை நடத்தியதாக அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். மேலும், கத்தியைக் காட்டி மிரட்டி, “திருமணத்திற்கு முன்பே எனக்குப் பலருடன் தொடர்பு இருந்தது, விவாகரத்துக்குப் பின் பாலியல் தொழிலில் ஈடுபடப் போகிறேன்” என்று அவதூறான வாக்குமூலத்தைக் கட்டாயப்படுத்தி ஆடியோவாகப் பதிவு செய்ய வைத்ததாகவும் அஞ்சு கூறியுள்ளார்.
இந்தக் கொடுமைகளுக்குப் பிறகு கேரளாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட அஞ்சு, தற்போது கொல்லம் மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சாவரா போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். எனினும், மருத்துவமனையில் போலீசார் தன்னிடம் வாக்குமூலம் வாங்கியபோது, வயிறு மற்றும் அந்தரங்க உறுப்புகளில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்கள் குறித்த விவரங்களை முறையாகப் பதிவு செய்யவில்லை என்று அஞ்சு குற்றம் சாட்டியுள்ளார்.
