CRIME
“மறுபடியும் ஒரு சௌமியா சம்பவம்..?” காவல்துறையில் புகார் அளிப்பதாகக் கூறியதால் மயங்கி விழும் வரை அடித்து உதைத்த கொடூரன்..! ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்..!!
கேரளாவில் உள்ள மலபார் எக்ஸ்பிரஸ் ரயிலில் 25 வயதுப் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, காவல்துறையிடம் புகார் அளிப்பதாகக் கூறியதால் மயங்கிக் விழும் அளவுக்குத் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் பெட்டாவில் உள்ள ரயில் நிலையத்தில் இறங்க முயன்றபோது, 39 வயதாகும் நபர் அவரைத் தாக்கியுள்ளார். பொதுமக்களின் துரித தலையீட்டால் அந்த நபர் தடுத்து நிறுத்தப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
வழக்கம்போல் சிராயின்கீழுவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வேலைக்குச் செல்ல ரயிலில் ஏறிய அப்பெண்ணை, பயணம் முழுவதும் அந்த நபர் தகாத முறையில் தொட்டுள்ளார். ஆரம்பத்தில் இது கூட்ட நெரிசலால் ஏற்பட்டிருக்கலாம் என்று அவர் நினைத்த போதிலும், பின்னர் அவரது செயலை அப்பெண் கடுமையாக எதிர்த்துள்ளார். பெட்டா ரயில் நிலையத்தில் ரயிலை விட்டு இறங்கும் போது, தான் காவல்துறையில் புகார் அளிக்கப் போவதாகக் கூறியதால் ஆத்திரமடைந்த அந்த நபர் அவரைத் தாக்கியுள்ளார். இதனால் அப்பெண் பிளாட்ஃபார்மில் மயங்கி விழுந்தார்.
இதனைக் கண்ட பிளாட்ஃபார்மிலிருந்த பொதுமக்கள் உடனடியாகத் தலையிட்டு அந்த நபரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். தலைநகரில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றின் மக்கள் தொடர்புத் துறையில் வேலை பார்க்கும் அப்பெண், பொதுமக்கள் காப்பாற்றாவிட்டால் அந்த நபர் தன்னைத் கொலை செய்திருப்பார் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், கைது செய்யப்பட்ட அந்த நபர் மீது ஏற்கனவே ஆட்டிங்கலில் ஒரு தாக்குதல் வழக்கு நிலுவையில் உள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
