“பெற்ற தாயா.. பேயா..?” இன்ஸ்டாகிராம் ஆப்ஸ் டெலீட் ஆனதால் ஆத்திரம்.. 6 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூர கதி.. நடுங்க வைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“பெற்ற தாயா.. பேயா..?” இன்ஸ்டாகிராம் ஆப்ஸ் டெலீட் ஆனதால் ஆத்திரம்.. 6 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூர கதி.. நடுங்க வைக்கும் சம்பவம்..!!

Published

on

திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றின்கரை அடுத்த பாறசாலை பகுதியைச் சேர்ந்தவர் ஷோபா. தனது முதல் கணவரைப் பிரிந்த இவர், விஷ்ணு என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டு வசித்து வருகிறார். ஷோபா எப்போதும் வாட்ஸ்அப் சாட்டிங், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என முழுநேரமும் சமூக வலைதளங்களிலேயே மூழ்கி, செல்போனுக்கு அடிமையாக இருந்துள்ளார். இதனால் இவர் தனது 6 வயது பெண் குழந்தையைக் கூட சரிவர கவனிக்காமல் அலட்சியம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மதியம் தாயின் செல்போனை எடுத்து விளையாடிய சிறுமி, அதிலிருந்த வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளை எதிர்பாராதவிதமாக அன்-இன்ஸ்டால் செய்துள்ளார். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த தாய் ஷோபா, பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் தன் கையில் கிடைத்த மரக்கட்டையால் சிறுமியை சரமாரியாகத் தாக்கியதுடன் தரையில் தூக்கி வீசியுள்ளார். இதில் சிறுமியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியதால் குழந்தை மயங்கிச் சரிந்துள்ளது. உடனே உஷாரான ஷோபா, தனது மகள் கட்டிலில் இருந்து கீழே விழுந்துவிட்டதாகக் கூறி பக்கத்து வீட்டாரிடம் நாடகமாடியுள்ளார்.

Advertisement

இரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை மீட்ட உறவினர்கள் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குச் சிறுமியின் காயங்களைக் கண்டு சந்தேகமடைந்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக நெய்யாற்றின்கரை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குள்ள மருத்துவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த பாறசாலை மகளிர் காவல்துறையினர், தாய் ஷோபாவை அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், ஷோபாவின் இரண்டாவது கணவர் விஷ்ணுவும் இதற்கு முன் ஒருமுறை குழந்தையைத் தாக்கியதில் தலையில் 4 தையல்கள் போடப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் விஷ்ணுவிடமும் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in