அய்யோ கடவுளே..! ஜிம் முடித்துவிட்டு புன்னகையுடன் வீடு திரும்பிய 20 வயது மகன் துடி துடித்து பலி..! நடுரோட்டில் கதறி அழுத தாய்.. கண்கலங்க வைக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அய்யோ கடவுளே..! ஜிம் முடித்துவிட்டு புன்னகையுடன் வீடு திரும்பிய 20 வயது மகன் துடி துடித்து பலி..! நடுரோட்டில் கதறி அழுத தாய்.. கண்கலங்க வைக்கும் வீடியோ..!!

Published

on

தெலங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டம் கீசரா காவல் எல்லைக்குட்பட்ட நாகரம்பள்ளி சௌராஸ்திரா சந்திப்பில் கோர வீதி விபத்து ஒன்று அரங்கேறியுள்ளது. உடற்பயிற்சிக் கூடத்தில் தனது பயிற்சிகளை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த அகில் (20) என்ற இளைஞர் நிலைதடுமாறி விழுந்து எதிர்பாராதவிதமாகச் சாலையில் சென்று கொண்டிருந்த கேஸ் லாரியின் பின் சக்கரத்தின் கீழ் சிக்கியுள்ளார்.

இதில் லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீசரா போலிஸார், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 20 வயதே ஆன இளைஞர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in